ஆத்தூர் சந்து கடை 2 பேர் கைது மதுபாட்டில்கள் பறிமுதல்

6பார்த்தது
ஆத்தூர் சந்து கடை 2 பேர் கைது மதுபாட்டில்கள் பறிமுதல்
சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை, முல்லை வாடி மஞ்சினி சாலையில் கள்ளச் சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், ஆத்தூர் நகர போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, முல்லைவாடி செல்லும் தரைப்பாலம் அருகே மதுபானங்களை விற்பனை செய்து வந்த கல்லாநத்தம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (43) என்பவரையும், முல்லைவாடி சுடுகாடு பகுதியில் விற்பனையில் ஈடுபட்டிருந்த முத்து (46) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 20க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.