வாழப்பாடி குழந்தை பாலின ம் பரிசோதனை இருவர் கைது

4பார்த்தது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரில் சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து பரிசோதனை செய்வதாக புகார் எழுந்த நிலையில், மருத்துவக் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வீட்டில் மூன்று கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்து கொண்டிருந்த வெங்கடேசன் மற்றும் லதா ஆகியோர் கையும் களவுமாக பிடிபட்டனர். இவர்கள் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறியும் இயந்திரத்தை பயன்படுத்தி பரிசோதனை செய்தது தெரியவந்தது. இருவரையும் வாழப்பாடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி