சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சின்னசேலம் நாவக்குப்பம் பகுதியில், தனது உறவினர் வீட்டில் இருந்து லோகநாதன், மணிகண்டன், கலைவாணி மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மேம்பாலத்திலிருந்து கலைவாணி (28) மற்றும் அவரது கணவர் லோகநாதன் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். கலைவாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த லோகநாதனுக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அனுப்பி வைக்கப்பட்டார். லேசான காயங்களுடன் மணிகண்டன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.