ஆத்தூர்: இரு சக்கரவாகன விபத்தில் பெண் உயிரிழப்பு

569பார்த்தது
ஆத்தூர்: இரு சக்கரவாகன விபத்தில் பெண் உயிரிழப்பு
ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்கும் போது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் மகள் கண்முன்னே தாய் கிருஷ்ணவேணி உயிரிழந்தார். தொடர்ந்து படுகாயம் அடைந்த மகள் பானுப்பிரியா சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

கடந்த ஞாயிறு அன்று நடந்த சாலை விபத்தில் நிகழ்வு இடத்திலேயே கிருஷ்ணவேணி உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மகள் பானுப்பிரியாவும் உயிரிழந்ததை உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி