ஆத்தூர் மதுக்கடை மூட பெண்கள் கடையின் முன் முற்றுகை

1775பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையத்தில் பிரதான சாலையில் உள்ள அரசு மதுபான கடை எண் 2160-ஐ அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் சிரமப்படுவதாகக் கூறி, கடை திறந்தவுடன் பொதுமக்கள் கடை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் மதுபிரியர்கள் திகைத்து ஓட்டம் பிடித்தனர். காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி