சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பனைமடல் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 3 நாட்களாக வேலை செய்த பெண்களுக்கு சம்பளத் தொகை வழங்கப்படவில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகம் சர்வர் பிரச்சனையால் வருகை பதிவேடு பதிவாகவில்லை என தெரிவித்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உதவி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வாக்குவாதம் செய்தனர். அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.