சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3 சென்ட் இடத்தில் கோவில் கொட்டகை அமைக்க அனுமதி கோரிய நிலையில், நகராட்சி அனுமதி வழங்காததைக் கண்டித்து, 75 அடி உயரமுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி பெண் சிவனடியார் பக்தர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார். இது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவரை பாதுகாப்பாக மீட்டனர்.