ஆத்தூர் வேன் கவிழ்ந்து தொழிலாளி பலி 15 பேர் படுகாயம்

2பார்த்தது
வாழப்பாடி அருகே விளாரி பாலம் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் சின்னசேலம் பகுதியில் விவசாயப் பணிக்காகச் சென்றுவிட்டு, பிக்அப் வாகனத்தில் வீடு திரும்பியபோது, ஆத்தூர் அருகே அழகாபுரம் பகுதியில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் செம்மலைக் கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி