ஏற்காடு மான் பூங்கா பராமரிப்பின்றி சேதம்: சுற்றுலாப் பயணிகள் வேதனை

1327பார்த்தது
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள ஏரி அருகே வனத்துறைக்கு சொந்தமான மான் பூங்கா, பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இந்தப் பூங்காவிற்கு சிறியவர்களுக்கு 10 ரூபாயும், பெரியவர்களுக்கு 20 ரூபாயும் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், பூங்காவின் பல பகுதிகள் பழுதடைந்துள்ள நிலையில், வனத்துறையினர் அதனை முறையாகப் பராமரிக்காமல் இருப்பது சுற்றுலாப் பயணிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்காடு ஏரி மான் பூங்காவின் இந்தப் பராமரிப்பின்மை சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி