சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லியகரை பகுதியில் உள்ள அன்னை நிதி நிறுவனத்தில் கடந்த 23ஆம் தேதி சுமார் 25 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் திருடப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய, கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த ஊழியர் லட்சுமணனை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 8.36 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. லட்சுமணன் உட்பட நான்கு பேர் இந்த நிதி நிறுவனத்தில்
வேலை செய்து வந்தனர்.