சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, மகளிர் சுய உதவி குழு கடன் வாங்கி தருவதாக கூறி 23 வயது இளம் பெண்ணிடம் ₹12.50 லட்சம் மோசடி செய்த செந்தாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். இளம்பெண்ணிடம் கடன் வாங்கி தருவதாகவும், மேலும் அவர் மூலம் தெரிந்தவர்களிடமும் கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துள்ளார். இது குறித்து இளம்பெண் கேட்டபோது, இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து, பெண் அளித்த புகாரின் பேரில் மோகன்தாசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.