சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பழனியாபுரி பிரிவு சாலையில், செந்தில்குமார் மகன் சிவசக்தி (19) இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது, சம்பத் ஓட்டி வந்த ஆம்னி கார் மோதி தூக்கி வீசப்பட்டதில் இளைஞர் படுகாயம் அடைந்தார். விபத்தில் ஆம்னி கார் தடுப்புச் சுவர் மீது மோதி நின்றது. அப்பகுதி மக்கள் இளைஞரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஊரக போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.