கடந்த 12ம் தேதி எடப்பாடி பகுதியை சேர்ந்த செல்வி தனது மகன் அபிஷ்கா மற்றும் அக்கா பேரனான மிதுலேஸ் உடன் டூவீலரில் காக்காபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, இருவர் அவர்களைப் பின்தொடர்ந்து கழுத்தில் இருந்த தாலி செயின் மற்றும் நகையைப் பறித்துச் சென்றனர். இது குறித்து மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த பாண்டியன் மற்றும் திருப்பூர் பூலுவாப்பட்டி பகுதியை சேர்ந்த அரவிந்த் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.