சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று (நவம்பர் 15) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி மரவனேரி பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாள்-1 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 4,646 பேரில் 3,999 பேர் மட்டுமே பங்கேற்றனர். 647 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. இத்தேர்வு சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் நடைபெற்றது. தேர்வு மையங்களுக்கு 300-க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டனர் மற்றும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.