அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுவதற்காக வந்துள்ளனர். இந்த சந்திப்பில் ஆற்காடு, அந்தியூர், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அமைச்சரவையில் இடமில்லை என தெரிந்துவிட்டதால் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணையவுள்ளதாக கூறப்படுவதால் இந்த சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.