அரசுபள்ளியில் மாணவிகளின் கன்னத்தை ஆசிரியர் கிள்ளுவதாக புகார்

4பார்த்தது
அரசுபள்ளியில் மாணவிகளின் கன்னத்தை ஆசிரியர் கிள்ளுவதாக புகார்
சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள அரசு பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், ஒரு ஆசிரியர் மாணவிகளின் கன்னத்தை கிள்ளுதல், தோளில் கைப்போடுதல் போன்ற தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதாக மாணவிகள் சிலர் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தனர். இது குறித்து குழந்தைகள் நல காப்பக அதிகாரிகள் சில நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.