எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற தேங்காய் கொப்பரை ஏலத்தில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 26 மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டன. முதல் தரம் கிலோ ரூ.133.50 முதல் ரூ.189.90 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.105.10 முதல் ரூ.117.50 வரையிலும் ஏலம் போனது. இதன் மூலம் மொத்தம் ரூ.6 லட்சத்து 31 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஏலம் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.