திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க உப கிளை ஜலகண்டாபுரத்தில் நேற்று நடைபெற்ற கொப்பரை தேங்காய் பருப்பு ஏலத்தில், 184 மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. முதல் ரகம் கிலோ ரூ. 182.95 முதல் ரூ. 224 வரையிலும், இரண்டாம் ரகம் கிலோ ரூ. 100.10 முதல் ரூ. 175.10 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 13 லட்சத்து 74 ஆயிரத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனதாக அலுவலர் தெரிவித்தார். மேட்டூர், கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் இங்கு தேங்காய் பருப்பை ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.