திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் ஜலகண்டாபுரம் கிளையில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் பெருந்துறை, நரியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர். அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ. 6¾ லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.