சேலம்: மழையிலும் தொடர்ந்த அறக்கட்டளை சேவை

1343பார்த்தது
சேலம் மாநகரம், பொன்னம்மாப்பேட்டை பகுதியில் உள்ள புத்து மாரியம்மன் கோயில் அருகில், மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் தலைமையில் செயல்படும் 'தெய்வா அறக்கட்டளை'யின் சார்பில், இன்று (நவ.06) தொடர்ந்து 266-வது நாளாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 100-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு சுடச்சுட காலை சிற்றுண்டியாக இட்லி, வெண்பொங்கல், வடை, சட்னி மற்றும் சாம்பார் வழங்கப்பட்டது. இந்த சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி