சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று எடப்பாடிக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு நகர அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், தொகுதியில் அதிமுக வெற்றிக்கு பாடுபட்ட நிர்வாகிகளைப் பாராட்டி, நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்துவது குறித்தும் விவாதித்தார்.