சேலம் கன்னங்குறிச்சி அரசு மருத்துவமனையில் நம்பிக்கை மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக்டோ ஜியோ கூட்டமைப்பு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்து வருகின்றனர். இது அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்தப்படுகிறது.