எடப்பாடி அருகே, காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர், வீட்டில் யாரும் இல்லாதபோது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் அளித்த வாக்குமூலத்தில், மாமனாரின் பாலியல் தொல்லை காரணமாகவே தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்தார். இதையடுத்து, மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறி மாமனார் மீது போலீஸார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.