அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம்

2பார்த்தது
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம்
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பேபி கிட் வழங்கப்பட்டது. சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம். செல்வகணபதி எம்.பி. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து, பேபி கிட் வழங்கினார். இதேபோல், மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பிறந்த குழந்தைக்கு டி.எம். செல்வகணபதி எம்.பி. தங்க மோதிரம், பேபி கிட் மற்றும் பழங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி