எடப்பாடி அருகே மது போதையில் அரசு பள்ளி ஆசிரியர் ரகளை: கைது

0பார்த்தது
எடப்பாடி அருகே மது போதையில் அரசு பள்ளி ஆசிரியர் ரகளை: கைது
எடப்பாடி ஒன்றியம் ஆடையூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஆசிரியர் தங்கராஜ் (55) நேற்று பள்ளி வளாகத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தட்டி கேட்டபோது, அவர்களை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இது குறித்து பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தங்கராஜை பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனையில் அவர் மது அருந்தி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குடிபோதையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் ரகளையில் ஈடுபட்டதாக அரசு பள்ளி ஆசிரியர் தங்கராஜை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி