சேலம் கொங்கணாபுரம் அடுத்த ராக்கியம்பட்டியில், நிலத்தை எழுதித் தர மறுத்த பாட்டியைக் கத்தியால் குத்திக் கொன்ற 16 வயது சிறுவன் போலீசில் சரணடைந்தான். சுப்பிரமணி-கன்னியம்மாள் தம்பதியினரின் இளைய மகனான இச்சிறுவன், தனது பாட்டி கந்தாயியிடம் 2.5 ஏக்கர் விவசாய நிலத்தில் ஒரு பகுதியை எழுதித் தருமாறு கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளான். நேற்று நிலத்தை எழுதித் தரக் கோரி பாட்டியைத் தாக்கி கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.