எடப்பாடி அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு; மெக்கானிக் கைது

0பார்த்தது
எடப்பாடி அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு; மெக்கானிக் கைது
எடப்பாடி அருகே கஞ்சியூர் பகுதியில் வசிக்கும் 70 வயது சின்னபொண்ணு என்ற மூதாட்டியை, முகமூடி அணிந்த மர்ம நபர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து அவர் அணிந்திருந்த தங்கத்தோடுகளை பறித்து சென்றார். இது குறித்து பூலாம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் சரவணன் (30) என்பவர் தொழிலுக்கு வாங்கிய கடனை அடைக்க இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.