கொங்கணாபுரம் கூட்டுறவுசங்கம் ரூ. 50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

62பார்த்தது
கொங்கணாபுரம் கூட்டுறவுசங்கம் ரூ. 50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி, எள், நிலக்கடலை, கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த சுமார் 2 ஆயிரம் பருத்தி மூட்டைகள் 450 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு கூட்டுறவு அலுவலர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. 

பி.டி.ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 7 ஆயிரத்து 400 முதல் ரூ. 8 ஆயிரத்து 360 வரை விற்பனையானது. டி.சி.எச். ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 8 ஆயிரத்து 900 முதல் ரூ. 10 ஆயிரத்து 350 வரை விலை போனது. கொட்டு ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 4 ஆயிரத்து 600 முதல் ரூ. 5 ஆயிரத்து 200 வரை விற்பனையானது. ஏலத்தில் ரூ. 50 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

தொடர்புடைய செய்தி