அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 362 மாணவர்களுக்கு லேப்டாப்

1பார்த்தது
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 362 மாணவர்களுக்கு லேப்டாப்
வனவாசி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் டி.எம். செல்வகணபதி எம்.பி. தலைமை தாங்கி 362 மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி பேசினார். இந்த விழாவில் கல்லூரியின் முதல்வர் வரதகுரு, எந்திரவியல் துறை பேராசிரியர் மாரிசாமி மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி