எடப்பாடி அருகே செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

5பார்த்தது
எடப்பாடி அருகே செம்மண் கடத்திய லாரி பறிமுதல்
எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட பக்கநாடு, ஆடையூர் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் இருந்து செம்மண் கடத்தப்படுவதாக வந்த புகாரை அடுத்து, தனி தாசில்தார் ராஜ்குமார் தலைமையிலான கனிமவளத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, டிரைவர் தப்பி ஓடிவிட்டார். லாரியில் 3 யூனிட் செம்மண் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டு பூலாம்பட்டி போலீசில் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி