ஜலகண்டாபுரம் அருகே அங்காளம்மன் கோவிலில் மகாசிவராத்திரி விழா

891பார்த்தது
ஜலகண்டாபுரம் அருகே அங்காளம்மன் கோவிலில் மகாசிவராத்திரி விழா
சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகே சஞ்சீவியூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. முன்னதாக, நாடார் உறவின் முறை பங்காளிகள் பூஜை கூடைகளை சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.