மேச்சேரி அருகே மினிபஸ்- கார் மோதல்; போலீஸ் எஸ்ஐ பலி

2பார்த்தது
மேச்சேரி அருகே மினிபஸ்- கார் மோதல்; போலீஸ் எஸ்ஐ பலி
சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அமரகுந்தி பகுதியை சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் (55) நேற்று மாலை தனது காரில் நங்கவள்ளி அரசு ஆஸ்பத்திரி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மினி பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயம் அடைந்த அவரை சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நங்கவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.