எடப்பாடி அருகே முரசப்பட்டி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் பெரியநாயகம், நேற்று வீடு திரும்பியபோது மனைவி திவ்யா வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இரண்டு மகன்களைத் தவிக்கவிட்டு திவ்யா மாயமானதாகக் கூறப்படுகிறது. அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெரியநாயகம் பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.