எடப்பாடி அருகே தார்சாலை தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

3பார்த்தது
எடப்பாடி அருகே தார்சாலை தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு
சேலம் மாவட்டம் எடப்பாடி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சவுரிபாளையம்-வேம்பனேரி-புதுப்பாளையம் வரை ₹3 கோடியே 70 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் பணிகளை சேலம் நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகு கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையிலான உள்தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர். சாலையின் அகலம், தடிமன், மேல்தள சாய்வு போன்றவற்றை அவர்கள் அளவீடு செய்தனர்.

தொடர்புடைய செய்தி