எடப்பாடி, சித்தூர் ஊராட்சி புளியம்பட்டியைச் சேர்ந்த தமிழரசி, கல்லூரியில் படிக்கும்போது அதே ஊரைச் சேர்ந்த கோபால் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். அப்போது, வீட்டிற்குத் தெரியாமல் தமிழரசி கொடுத்த 4 பவுன் தங்கச் சங்கிலியை கோபால் விற்று செலவு செய்துவிட்டார். சங்கலியைத் திரும்பக் கேட்டபோது கோபால் இழுத்தடித்ததால், தமிழரசி குடும்பத்தினர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில், தொளசம்பட்டி காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றும் தமிழரசியின் தந்தை பெருமாள் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து கோபாலைக் கைது செய்தனர்.