சேலம்: பெண்ணுக்கு தவறான சிகிச்சை; ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகை

51பார்த்தது
சேலம்: பெண்ணுக்கு தவறான சிகிச்சை; ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகை
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் கச்சுபள்ளியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி இந்திரா (வயது 26). நிறைமாத கர்ப்பணியாக இருந்த இவர் கடந்த 19-ந் தேதி பிரசவத்திற்காக வெள்ளாளபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், பிரசவத்திற்கு பின் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக இந்திரா சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இந்நிலையில், இந்திராவுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் நேற்று மாலை வெள்ளாளபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆஸ்பத்திரியில் இருந்த சுகாதார பணியாளர்கள், இந்திராவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், பிரசவத்திற்கு பின் கவனக்குறைவாக இருந்ததால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு வந்த கொங்கணாபுரம் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி