கொங்கணாபுரம் வாரச் சந்தையில் ரூ.5 கோடி வர்த்தகம்

56பார்த்தது
கொங்கணாபுரம் வாரச் சந்தையில் ரூ.5 கோடி வர்த்தகம்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் நேற்று நடைபெற்ற வாரச் சந்தையில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் பங்கேற்றனர். விவசாயிகள் 9,750 ஆடுகள், 2,700 பந்தய சேவல் மற்றும் கோழிகள், காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 10 முதல் 40 கிலோ எடையுள்ள ஆடுகள் ரூ.6,200 முதல் ரூ.38,500 வரையிலும், பந்தய சேவல்கள் ரூ.2,000 முதல் ரூ.3,500 வரையிலும் விலை போனது. சந்தையில் நேற்று மட்டும் சுமார் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி