சேலம் மாவட்டத்தில் முதலாம் உலகப் போரில் உயிர் நீத்தவர்களின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில், சேலம் வரலாற்றுச் சங்கம் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமையில், செயல் தலைவர் தாரை குமரவேல், பொதுச் செயலாளர் பர்ணபாஸ், டாக்டர். கர்லின் எபி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வு முதலாம் உலகப் போரின் தியாகங்களை நினைவு கூர்ந்தது.