எடப்பாடி அருகே தந்தையை தாக்கிய மகன் கைது

52பார்த்தது
எடப்பாடி அருகே தந்தையை தாக்கிய மகன் கைது
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே செட்டிமாங்குறிச்சி ஆலமரத்துக்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு. இவரது மகன்கள் முருகேசன், செந்தில் இவர்கள் இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். சின்னக்கண்ணு மனைவி இறந்து 17 ஆண்டுகள் ஆகிறது. வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (மார்ச் 28) மதியம் சின்னக்கண்ணுவை பார்க்க அவரது வீட்டிற்கு மூத்த மகன் முருகேசன் சென்றுள்ளார். அப்போது வீட்டில் கட்டி இருந்த ஓலைதடுக்கை பிரித்து எரிந்துள்ளார். 

இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகேசன் தந்தையை தகாத வார்த்தையில் திட்டி தாக்கியுள்ளார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் முருகேசன் ஓடிப்போனான். இதையடுத்து காயம் அடைந்த சின்னக்கண்ணுவை எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி முருகேசனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி