எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதி மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம், எடப்பாடி செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. மேட்டூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மின் நுகர்வோர்கள் தங்களது மின் வினியோகம் தொடர்பான குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என எடப்பாடி கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.