சேலத்தில் ஓடும் பஸ்ஸில் மொபைல் போன் திருட்டு

76பார்த்தது
சேலத்தில் ஓடும் பஸ்ஸில் மொபைல் போன் திருட்டு
சேலம் மாவட்டம் எடப்பாடி குரும்பபட்டியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான கோபாலகிருஷ்ணன். இவர் இன்று அரசு பஸ்ஸில் சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புது பஸ் ஸ்டாண்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவரிடம் இருந்த மொபைல் போனை இரண்டு பேர் திருடினர். இதை கவனித்த கோபாலகிருஷ்ணன் கூச்சலிடவே சக பயணிகள் இருவரையும் பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். 

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் தஞ்சாவூர் சியாரமங்கலத்தைச் சேர்ந்த சக்திவேல், சேலம் மாவட்டம் வளையமாதேவியை சேர்ந்த பூபதி என தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து மொபைல் ஃபோனை மீட்டனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி