சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி-எடப்பாடி சாலையில் கன்னந்தேரி பகுதியில் உள்ள சுடுகாடு, நூறு ஏரிகள் நிரப்பும் திட்டத்தின் கீழ் கொல்லப்பட்டி ஏரியிலிருந்து வரும் உபரிநீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சுடுகாட்டிற்குள் நீர் புகாதவாறு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.