எடப்பாடி: தர்பூசணி பழம் குறித்து தவறான தகவல் கூறிய பெண் கைது

1182பார்த்தது
எடப்பாடி: தர்பூசணி பழம் குறித்து தவறான தகவல் கூறிய பெண் கைது
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே, தாவாந்தெருவைச் சேர்ந்த சங்கீதா என்பவர், கடையில் வாங்கிய தர்பூசணியில் ரசாயனம் கலந்து உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பினார். இதுகுறித்து தாசில்தார் வைத்தியலிங்கம் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பரிசோதனையில் ரசாயனம் கலக்கப்படவில்லை என தெரியவந்தது. இதையடுத்து, தவறான தகவல் பரப்பிய சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி