எடப்பாடி அருகே ஹாஸ்டல் வீட்டில் நகை திருடிய பெண் கைது

1பார்த்தது
எடப்பாடி அருகே ஹாஸ்டல் வீட்டில் நகை திருடிய பெண் கைது
எடப்பாடி அருகே ஆசிரியர் செந்தில் குமரவேல் தம்பதி வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு போனது. இதுகுறித்து எடப்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், முகக்கவசம் அணிந்த மர்ம பெண் ஒருவர் நடமாடியது தெரியவந்தது. தீவிர விசாரணையில், கரூர் அருகே வெங்கமேடு பகுதியை சேர்ந்த ரமணி (36) என்பவரே இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நகைகளை மீட்டனர்.

தொடர்புடைய செய்தி