எடப்பாடியில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல் போராட்டம்

0பார்த்தது
எடப்பாடியில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல் போராட்டம்
எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட இருப்பாளி, மூலக்கடை, வீரன்வலவு பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்துள்ளதால், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி பெண்கள் 50 பேர் நேற்று ஜலகண்டாபுரம்-எடப்பாடி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அதிகாரிகள் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

தொடர்புடைய செய்தி