எடப்பாடி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல் போராட்டம்

3பார்த்தது
எடப்பாடி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல் போராட்டம்
எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகம் பூலாம்பட்டி காவிரி கதவணையின் பராமரிப்புப் பணிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காமல், ஒரு வாரமாக எடப்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. இது தொடர்பாக, எடப்பாடி தாவாந்தெரு மற்றும் க. புதூர் மேற்கு பகுதி பெண்கள் நேற்று எடப்பாடி-பூலாம்பட்டி பிரதான சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி