ஜலகண்டாபுரத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து வாலிபர் கைது

3பார்த்தது
ஜலகண்டாபுரத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து வாலிபர் கைது
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் செலவடை தாசனூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (40) மற்றும் அவரது மனைவி ஜோதி (36) ஆகியோர் சின்னா கவுண்டம்பட்டி நேரு நகரில் வீடு கட்டி வருகின்றனர். அதே பகுதியில் வசிக்கும் தறி தொழிலாளி அண்ணாமலை (43) என்பவர், ஜோதி தனியாகச் செல்லும்போது தவறாகப் பார்ப்பதாகக் கூறி கடந்த 6 மாதங்களாக பிரச்சினை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜோதி வீட்டில் விளக்கேற்றிவிட்டு வெளியே வந்தபோது, அண்ணாமலை அவரிடம் தகராறில் ஈடுபட்டு, தறிக்கு பயன்படுத்தும் கத்தியால் ஜோதியைக் குத்தியுள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார் அண்ணாமலையைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.