சேலம் வழியாக சென்ற ரயிலில் திருடிய வாலிபர் கைது

71பார்த்தது
சேலம் வழியாக சென்ற ரயிலில் திருடிய வாலிபர் கைது
மைசூரில் இருந்து சேலம் வழியாக தூத்துக்குடிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை சென்றது. அந்த ரயிலில் எஸ் -9 கோச்சில் விருதுநகரை சேர்ந்த நாகராணி என்ற பெண் பயணம் செய்தார். அப்போது அவர் கைப்பேசியை தலையில் வைத்து தூங்கினார். ரெயில் சேலம் அருகே வந்தபோது திடீரென எழுந்து பார்த்தபோது கைப்பேசியை காணவில்லை. 

அந்த பேசியில் செல்போன், பணம், ஐ.டி. கார்டுகள் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ரெயிலில் இருந்த ரோந்து போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ரயில்வே போலீசார் தர்மபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக விசாரித்தபோது கைப்பேசியை திருடிய அந்த நபர் பாலக்கோடு ரயில் நிலையத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். 

பின்னர் விசாரித்தபோது ஒடிசா மாநிலம் பூரியை சேர்ந்த சாஜித் என்ற ராஜன் என்பது தெரியவந்தது. மேலும் வேறு கொள்ளைகளில் ஈடுபட்டாரா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி