சேலம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள தேவாங்கபுரம் புதுத்தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன், நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இன்று காலை குடும்பத்தினர் தேடியபோது, அரசு மருத்துவமனை எதிரே சேலம்-விருத்தாச்சலம் செல்லும் தண்டவாளப்பகுதியில் உடல் சிதறிய நிலையில் அவர் இறந்து கிடந்தார். ரயில் மோதி அவர் பலியானதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.