சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 24 பேர் சனிக்கிழமை கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றனர். திரும்பும் வழியில், தம்மம்பட்டி அருகே வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தம்மம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.